Tuesday 5 June 2012

What does god bless ? ( கடவுள் எதை ஆசிர்வதிப்பார் ? )

Worthless land :
Once, in a village, there was an young man owning an infertile agricultural land which was his heirdom. His ancestors tried to cultivate something in their land. But, they failed and the land was deserted years together.

The people's talk :
That was a village, where the people's income is solely dependent on agriculture. Due to lack of income, poverty surrounded his family. People in his village started speaking slander on their family that they were sinners and so, their land was infertile.

What did the young man do ? :
This energetic young man stood bravely with the thought of, "Why can't I ?". Driven by the optimistic thoughts, he worked persistently hard. His hard work and perseverance changed the fate of the land and of his family too. He got a good yield and released his family from the clutches of poverty.

Monk's words :
A monk in that village, seeing his progressive growth, met him on a fine morning. After blessing him, he told that "God has blessed you! Because of that, you were able to achieve this" for which the young man replied,

"God never blesses people. He blesses only their hard work !"



கடவுள் எதை ஆசிர்வதிப்பார் ?
அது, ஒரு விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்ட கிராமம். அங்கு விஜயன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள ஒரேயொரு வளமற்ற விவசாய நிலம் தான் இருந்தது. அது அவனுடையப் பரம்பரை சொத்து. அவனுடைய தாத்தா காலத்திற்கு முன்பிருந்தே அந்த நிலத்தில் விளைச்சலே இல்லை.

 ஊராரின் கேலி :
அவர்களுடைய அவல நிலை கண்டு உதவி செய்யாவிட்டாலும், ஊராரின் கேலியும், அவர்கள் செய்த பாவத்தினால் தான், அவர்களுக்கு இந்த நிலை என்ற அவதூறுப் பேச்சும் ஓயவே இல்லை.

விஜயனின் விடா முயற்சி :
பிறர் பேச்சை கேட்டு துவண்டு போகாமல், விஜயன், விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தான். அவன் உழைப்பிற்கு கிடைத்த பரிசு, விளையாத நிலமெல்லாம் விளைச்சல் அமோகமாகி, குடும்பத்தின் வறுமை நீங்கியது. 

ஒரு சாதுவுடன் உரையாடல் :
இந்த நிகழ்ச்சிகள் யாவும் அறிந்த சாமியார் ஒருவர், விஜயனை ஒரு நாள் நேரில் கண்டார். அவனிடம், "தம்பி! கடவுள் உன்னை ஆசிர்வதித்துள்ளார்! அதனால் தான் நீ இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு வந்துள்ளாய்", என்றார். அதற்கு விஜயன், "கடவுள் எப்பொழுதுமே மனிதர்களை ஆசிர்வதிக்க மாட்டார்! அவர்களுடைய கடின உழைப்பைத்தான் ஆசிர்வதிப்பார்", என்றான் ஒரு குறுநகையோடு !

1 comment:

You can leave your comment...